தமிழ்நாடு

தவறான சிகிச்சை அளித்த மருத்துவருக்கு 6 மாதம் சிறை: திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு

DIN


திருவாரூர்: திருவாரூரில் வயதான பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் ஆறுமுக பாண்டியனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து நுகர்வோர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2009ம் ஆண்டில் பட்டம்மாள் என்ற பெண்ணுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த எலும்பு முறிவுக்கு மருத்துவர் ஆறுமுக பாண்டியன் தவறான சிகிச்சை அளித்ததால், கால் செயலிழந்தது. 

தவறான சிகிச்சை அளித்ததால் கால் செயலிழந்த பெண்ணுக்கு 75 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க நீதிமன்றம் கடந்த 2011ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்ற உத்தரவை மதிக்காத மருத்துவர் ஆறுமுக பாண்டியனுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பாரமுல்லாவில் 35 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT