தமிழ்நாடு

கோடை வெயில்: தமிழகம், புதுச்சேரியில் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்

DIN

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 7ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னையை அடுத்த அம்பத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறக்கப்படும் அன்றே மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படும். தொடர்ந்து ஒரே வாரத்தில் இலவச பஸ் பாஸ் தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

முன்னதாக ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடும் வெயில் காரணமாக மேலும் ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதையடுத்து, புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பு ஜூன் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT