தமிழ்நாடு

கொடுமுடியாறு அணை நிரம்பியது

DIN

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை கொடுமுடியாறு அணை நிரம்பியது. இதையடுத்து, உபரிநீரை வள்ளியூரான் கால்வாயில் திறந்துவிட பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். 
திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி மலையடிவாரத்தில் உள்ள கொடுமுடியாறு அணையின் மொத்த கொள்ளளவு 52.50 அடி. கடந்த 2 வாரங்களாக மலைப் பகுதியில் பெய்த மழையால் நவ.1 நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 51.75 அடியை எட்டியது. இந்நிலையில் அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதையடுத்து, அணையின் நீர்மட்டம் 50 அடியாகக் குறைந்தது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததையடுத்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொடுமுடியாறு அணை முழுக்கொள்ளளவான 52.50 அடியை எட்டியது. 
இதையடுத்து, பொதுப்பணித் துறையினர் ஏற்கெனவே வள்ளியூரான் கால்வாயில் திறக்கப்பட்ட நீரின் அளவை அதிகரித்தனர். இந்த அணையின் மூலம் நான்குனேரி, ராதாபுரம் வட்டத்தில் உள்ள 44 குளங்களுக்கு பாசனத்துக்கான நீர் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT