தமிழ்நாடு

வடக்கே சென்ற காற்றழுத்தத் தாழ்வு நிலை: இன்று ஒரு நாள் மட்டும் மழை

DIN

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், இன்று ஒரு நாள் மட்டும் மழை பெய்யும். நாளை முதல் மழை படிப்படியாகக் குறைந்து விடும்.

வங்கக் கடலில் உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வடக்கு நோக்கி நகர்ந்ததால், தமிழகத்துக்கு மழை வாய்ப்பு குறைந்தது.

இந்த நிலையில், மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பதாவது, இன்று பகல் நேரத்தில் மழை வாய்ப்பு உண்டு. நாளை முதல் இது படிப்படியாகக் குறைந்துவிடும். வடக்கு நோக்கி நகர்ந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்வது இன்றே கடைசியாக இருக்கும்.

இன்று இரவு வரை சென்னையில் மழை பெய்யும்.  சில சமயங்களில் பலத்த மழையாகவும் இருக்கும்.

நேற்று இரவு ராமநாதபுரம் மாவட்டப் பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் அதிர்ஷ்டம் இருந்தால் நாகை மாவட்டங்களுக்கும் மழை வாய்ப்பு உண்டு. கோவை, நீலகிரியின் சில பகுதிகள், திண்டுக்கல் பகுதிகளுக்கு மழை வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதிகம் எதிர்பார்க்க வேண்டாம். பரவலாக மழை இருக்காது என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

தில்லியில் கொலை வழக்கு கைதி போலீஸ் பிடியில் இருந்து தப்பினாா்

SCROLL FOR NEXT