முகப்பு
தமிழ்நாடு

மீனவர்கள் மீதான தாக்குதல் துரதிஷ்டவசமானது

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல் நடத்தியது துரதிஷ்டவசமானது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழ்நாடு

மீனவர்கள் மீதான தாக்குதல் துரதிஷ்டவசமானது

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல் நடத்தியது துரதிஷ்டவசமானது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல் நடத்தியது துரதிஷ்டவசமானது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பொன்.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை காஞ்சிபுரம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மீனவர்கள்மீது இந்திய கடற்படை தாக்குதல் நடத்தியது துரதிஷ்டவசமானது. எனினும், இந்திய கடற்படையினர்தான் சுட்டார்களா என்பது இதுவரை உறுதியாக்கப்படவில்லை. 
துப்பாக்கிச் சூடு குறித்து யார் புகார் கொடுத்தாலும் போலீஸார் வழக்குப் பதிய வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆளும் அரசுக்கு ஆளுநர் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். அத்துடன், மாநிலத்தின் நிலைமையை தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் செயல்படுகிறார். அதிகார வரம்புக்கு உள்பட்டு இருக்கும்போது, விமர்சனம் செய்வதற்கு உரிமை இல்லை. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதற்காகவே இருப்பவர்கள். நிரந்தர ஆளுநர் இல்லை என்று தமிழகத்தில் கூறி வந்தனர். அதன்படி செயல்படக் கூடிய ஆளுநர் வந்திருக்கிறார். 
தமிழகத்தின் நிலைமைகளை ஆளுநர் தெரிந்து கொள்கிறார். மாநில அரசுக்கு ஆளுநர் பக்கத் துணையாக இருப்பதாகவே தமிழக அமைச்சர்களும் நினைக்கின்றனர். தவிர, ஆளுநர் எந்த வரம்பு மீறிச் செயல்படுகிறார் என்று யாரும் கூற முடியாது. ஆளுநர் அரசுக்கு ஆலோசனை வழங்கலாம். அதற்காக ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதில் எந்தத் தவறும் இல்லை.
தேசிய பத்திரிகையாளர் தினத்தில் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நல்ல நட்புறவு உள்ளது என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.
 
முழு கட்டுரையைப் படிக்க →