தமிழ்நாடு

சென்னை சுங்கத்துறை இணையத்தை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 'ஹேக்' செய்தனர்

Raghavendran

சென்னை சுங்கத்துறையின் இணையதளப் பக்கம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் வெள்ளிக்கிழமை முடக்கப்பட்டது.

''டீம் பாக் சைபர் ஸ்கல்ஸ்''  என்ற பெயரில் அந்த ஹேக்கர்கள் இச்செயலை செய்துள்ளனர்.

மேலும், இந்தியாவில் இருந்து காஷ்மீரை விடுவிக்கும்படியும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய ராணுவத்துக்கு எதிராகவும் அதில் கோஷங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், சுங்கத்துறை  இணையதளப் பக்கம் தற்போது சரிசெய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் இச்சம்பவம் குறித்து புகார் எதுவும் அளிக்கவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுங்கத்துறை இணையதளம் இதேபோன்று வேறு சில மர்ம ஆசாமிகளால் முடக்கப்பட்டு பின்னர் சரிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

ஒரு சிறிய காதல் கதை..!

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

SCROLL FOR NEXT