தமிழ்நாடு

தமிழக ரேஷன் கடைகளில் அரிசி வழங்கும் முறையில் புதிய மாற்றம்! 

DIN

சென்னை: தமிழக அரசின் பொது விநியோகத் துறையின் கீழ் வரும் ரேஷன் கடைகளில் அரிசி வழங்கும் முறையில் புதிய மாற்றம் கொண்டு வந்து தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசின் நுகர்பொருள் வாணிகத் துறையின் முதுநிலை மேலாளரிடம் இருந்து கிடங்கு பொறுப்பாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழக அரசின் நுகர்பொருள் வாணிகத் துறைக்கு இந்திய உணவுக்கு கழகத்திடம் இருந்து அரிசியானது 70:30 என்ற விகிதத்தில் வழங்கப்படுகிறது. அதாவது 70% புழுங்கல் அரிசியும், 30% பச்சரிசியும் வழங்கப்படுகிறது.   எனவே இதே விகிதத்திலேயே நுகர்வோருக்கும் வழங்குமாறு இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

இதன் மூலம் இனி குடும்ப அட்டையின் மூலம் 20 கிலோ அரிசி பெறும் ஒரு வாடிக்கையாளருக்கு அதில் 14 கிலோ புழுங்கல் அரிசியும், 6 கிலோ பச்சரிசியும் வழங்கப்பட வாய்ப்புள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

குட் பேட் அக்லி படப்பிடிப்பு அப்டேட்!

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT