தமிழ்நாடு

திருமூர்த்தி அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு

DIN

நான்காம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு திருமூர்த்தி அணையில் இருந்து நீர் திறந்து விட முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பரம்பிக்குளம் -ஆழியாறு திட்டத்தில், பாலாறு படுகை நான்காம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து, அணையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (அக். 8) முதல் உரிய இடைவெளி விட்டு இரண்டு சுற்றுகளாக மொத்தம் 3,800 மில்லியன் கன அடிக்கு மிகாமல், நீர் இருப்பு, வரத்தைப் பொறுத்து தண்ணீர் திறந்து விடப்படும்.
இதனால், கோவை மாவட்டம் பொள்ளாச்சி, திருப்பூர் மாவட்டம் பல்லடம், காங்கேயம், தாராபுரம் வட்டங்களில் மொத்தம் 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தனது அறிக்கையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT