முகப்பு
தமிழ்நாடு

பொறையாறு விபத்தில் இறந்தோருக்கு உடனடியாகக் காப்பீட்டுத் தொகை

நாகை மாவட்டம், பொறையாறு விபத்தில் இறந்தவர்களுக்கு பாலிசிகளுக்குரிய இறப்புரிமைத் தொகையை எல்.ஐ.சி. நிறுவனம் உடனடியாக வழங்கியது.

தமிழ்நாடு

பொறையாறு விபத்தில் இறந்தோருக்கு உடனடியாகக் காப்பீட்டுத் தொகை

நாகை மாவட்டம், பொறையாறு விபத்தில் இறந்தவர்களுக்கு பாலிசிகளுக்குரிய இறப்புரிமைத் தொகையை எல்.ஐ.சி. நிறுவனம் உடனடியாக வழங்கியது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

நாகை மாவட்டம், பொறையாறு விபத்தில் இறந்தவர்களுக்கு பாலிசிகளுக்குரிய இறப்புரிமைத் தொகையை எல்.ஐ.சி. நிறுவனம் உடனடியாக வழங்கியது.
இதுகுறித்து எல்.ஐ.சி. தஞ்சாவூர் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொறையாறு பேருந்து பணிமனையில் கூரை சரிந்து தொழிலாளர்கள் பலர் இறந்தனர். எல்.ஐ.சி. கும்பகோணம் கிளை - 2 ஊழியர்களும், தஞ்சாவூர் கோட்ட அலுவலக ஊழியர்களும் உடனடியாகக் களத்துக்குச் சென்று ஆறுதல் கூறினர். மேலும், விபத்தில் இறந்த பேருந்து ஊழியர்களில் 6 பேர் பாலிசி வைத்திருந்ததை கணினி மூலம் கண்டறிந்தனர். அவர்கள் வைத்திருந்த பாலிசிகளுக்குரிய இறப்புரிமைத் தொகையை உடனடியாக வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்கத் தொடங்கினர்.
சாதாரணமாக ஒரு நபர் இறந்துவிட்டால் இறப்புரிமம் பெறுவதற்குரிய நடைமுறைகளான இறப்புச் சான்றிதழ் பெறுதல், தேவையான இறப்புரிமப் படிவங்களை நிறைவு செய்தல் ஆகியவை கோரப்படும். இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு இந்த நடைமுறைகள் அனைத்தும் தளர்த்தப்பட்டது. மேலும், இறந்த ஊழியர்களில் எல்.ஐ.சி. பாலிசி வைத்திருந்த 6 ஊழியர்களின் குடும்பத்தினருக்கு வெள்ளிக்கிழமை மாலையே ரூ. 15 லட்சம் அளவிலான உரிமத் தொகை வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →