எடப்பாடியை மாற்றுவது அல்லது பேரவையில் வாக்கெடுப்பு எது நடந்தாலும் நல்லது தான்: எம்எல்ஏ தங்கதமிழ்ச்செல்வன்
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கை அல்லது எடப்பாடியை மாற்றுவது உள்ளிட்ட எது நிறைவேறினாலும் நல்லது தான் என்று
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கை அல்லது எடப்பாடியை மாற்றுவது உள்ளிட்ட எது நிறைவேறினாலும் நல்லது தான் என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி தனியார் சொகுசு விடுதியில் வெள்ளிக்கிழமை 11 வது நாளாக தங்கியுள்ள டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் காலை நடை பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொண்டனர்.
இந்நிலையில் எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எங்கள் அணியில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது கூறியுள்ளார். அவர் சொன்னது உண்மை. நாங்கள் முதல்வரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.
திமுக தரப்பில் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இவை இரண்டில் எது நடந்தாலும் நல்லது. சனிக்கிழமை நல்ல முடிவு எடுக்கப்படும். எங்கள் அணியில் உள்ளவர்கள் எதிர் அணிக்கு வருவார்கள் என எதிர்பார்த்தர்த்தனர்.
ஆனால் 10 நாட்களுக்கு மேலாகியும் எங்கள் அணியில் உள்ளவர்கள் அங்கு செல்லவில்லை. எங்களுடைய உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் இறுக்கிறது. எங்களுடைய இறுதியான நிலைபாட்டை அவர்கள் புரிந்துகொண்டனர். இதற்கு மேலும் நல்ல முடிவை எடுக்கவில்லை என்றால் அது எல்லோருக்கும் ஆபத்து என்றார்.