முகப்பு
தமிழ்நாடு

பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வழக்கு அக்.3-ந் தேதி ஒத்திவைப்பு

சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் வழக்கு ஒத்திவைப்பு.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:49 PM
பகிர்:

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, சட்டப்பேரவையில் பெம்பான்மையை நிரூபிக்க வேண்டி ஆகஸ்டு 24-ந் தேதி பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

அதிமுக-வின் 19 சட்டப்பேரவை உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் மீதான ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்தனர். 

எனவே, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் அதிமுக அரசு பெம்பான்மையை நிரூபிக்க வேண்டும். இவ்விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் வித்தியாசாகர் ராவ் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

பேரவை உறுப்பினர்களே முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று கூறியபோதும், இதுவரை தமிழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. 

எனவே அதனை உடனே விரைந்து நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என புகழேந்தி என்ற வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு மீதான விசாரணை செவ்வாய்கிழமை நடந்தது. இதையடுத்து, இவ்வழக்கு மீதான விசாரணையை அக்டோபர் 3-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →