பெரும்பான்மையான எம்எல்ஏக்களின் ஆதரவு அரசுக்கு உள்ளது: எடப்பாடி பழனிசாமி
தமிழக அரசுக்கு பெரும்பான்மையான எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கோவை: தமிழக அரசுக்கு பெரும்பான்மையான எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
ஈரோடு எம்ஜிஆர் நுற்றாண்டு விழாவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் நீட் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெற இறுதிவரை போராடினோம் உச்ச நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. அதனால்தான், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி செயல்பட வேண்டிய நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது என்று பதிலளித்தார்.
மேலும் அவர் பேசுகையில், நேற்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தல் 109 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். பல்வேறு காரணங்களால் மற்றவர்கள் பங்கேற்க முடியவில்லை. பெரும்பான்மையான எம்எல்ஏக்களின் ஆதரவு அரசுக்கு உள்ளது என்று தெரிவித்தார்.