தமிழ்நாடு

ஆளுநரை இன்று சந்திக்கிறார் டிடிவி தினகரன்

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை, அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வியாழக்கிழமை (செப். 7) சந்தித்துப் பேசுகிறார்.

DIN

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை, அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வியாழக்கிழமை (செப். 7) சந்தித்துப் பேசுகிறார்.
ஆளுநர் மாளிகையில் நண்பகல் 12 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது. இந்தச் சந்திப்பின்போது, டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ-க்கள் 19 பேரும் உடனிருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் அளித்துள்ளனர்.
இந்தக் கடிதத்தின் மீது ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், ஆளுநரை டிடிவி தினகரன் சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து டிடிவி தினகரன் அறிவிப்பார் எனத் தெரிகிறது. இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வமான வாய்ப்புகள் தொடர்பாகவும் அவர் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் பாடிய ‘சிங்காரி’ பாடல் வெளியீடு!

பல பொருள் - ஒரு சொல் பயில்க

குரலினிது... ஷ்ரேயா கோஷால்!

ராகுல் டிராவிட்டின் சாதனையை சமன்செய்த ஜடேஜா; எட்டிப் பிடிக்கும் தூரத்தில் சச்சினின் சாதனை!

திராவிட மாடல் பெயர்க்காரணம் எதற்காக? -முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

SCROLL FOR NEXT