தமிழ்நாடு

'நீட்'க்கு எதிரான போராட்டங்களுக்கு தடை கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க மறுப்பு

DIN

நீட்' தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்குத் தடை விதிக்க கோரும் மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இது தொடர்பாக வழக்குரைஞர் ஜி.எஸ். மணி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். 
அதில், 'நீட் தேர்வு தொடர்பாக தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களைத் தொடர்ந்து சட்ட ஒழுங்கை தமிழக அரசு பேணிகாக்க உத்தரவிட வேண்டும். மேலும், நீட் தேர்வுக்கு எதிராகவும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் அரசியல் கட்சிகள், பொதுமக்கள் சட்ட விரோத போராட்டங்களை நடத்தவோ, மனிதச் சங்கிலி, சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்டவற்றை நடத்தவோ மாநில அரசு அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துக்கு (சிபிஎஸ்இ) இணையாக, மாநில அரசின் பதினொன்று, பன்னிரண்டு ஆகிய வகுப்புக்களுக்கானப் பாடத் திட்டத்தை மேம்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். தலித் மாணவி எஸ். அனிதாவின் தற்கொலை குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு குழு அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று நல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமிதவ ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வழக்குரைஞர் ஜி.எஸ். மணி புதன்கிழமை ஆஜராகி, 'தமிழகத்தின் சட்ட ஒழுங்குச் சூழலைக் கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும்' என முறையிட்டார். அதற்கு நீதிபதிகள், 'அவசர வழக்காக விசாரிக்க முடியாது' எனக் கூறி மறுத்துவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT