தமிழ்நாடு

அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்: தலைமைச் செயலர் வேண்டுகோள்

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவையேற்று, அரசு ஊழியர்கள் -ஆசிரியர்கள், வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன்

DIN

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவையேற்று, அரசு ஊழியர்கள் -ஆசிரியர்கள், வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்தி வரும் வேலைநிறுத்தம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வேலைநிறுத்தத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவையேற்று, அரசு ஊழியர்கள் -ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை (செப்.8) முதல் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

SCROLL FOR NEXT