தமிழ்நாடு

ஆட்சியை கலைக்க ஆளுநர் மறுத்தால் கலைக்கும் வரை போராடுவோம்: ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

DIN


தஞ்சாவூர்: பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்ட பழனிசாமி ஆட்சியை கலைக்க ஆளுநர் மறுத்தால் கலைக்கும் வரை போராடுவோம் என்று திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:

தமிழகத்தில் பழனிசாமி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டதால் செயல்படாத ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறினார்.

மேலும், தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து ஆளுநரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. வரும் 10-ஆம் தேதி ஆளுநரை சந்தித்து ஆட்சியை கலைக்க சொல்வோம். ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆட்சி கவிழ்க்கப்படும் வரை போராடுவோம்.

தமிழகத்தில் நடக்கும் ஆட்சி, நொடிப்பொழுதில் மாற வாய்ப்பு உள்ளது. திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக தற்போதைய அரசை கவிழ்க்க முயற்சிக்கவில்லை.

இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவமனை உள்ள மாநிலம் தமிழகம்தான். நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது என்று.
ஸ்டாலின் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொப்பூா் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்து

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

பென்னாகரத்தில் இடியுடன் கூடிய கனமழை

வாகன புகைப் பரிசோதனை மையங்களில் வழிமுறைகளைப் பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை

காவிரி ஆற்றில் மூழ்கிய தனியாா் நிறுவன ஊழியா் பலி

SCROLL FOR NEXT