தமிழ்நாடு

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: சலுகை விலையில் நூல்கள் விற்பனை

DIN

அண்ணா பிறந்த நாள் மற்றும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை (செப்.15) முதல் சலுகை விலையில் நூல்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.
இதுகுறித்து தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கோ.விசயராகவன் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கருத்தரங்குகள், சொற்பொழிவுகள், ஆய்வுகள், திட்டப் பணிகள் போன்றவற்றின் மூலமாக நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நூல்களை அனைத்து மாணவர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் குறைந்த விலையில் கிடைத்துப் பயன் பெற வேண்டுமென்ற நோக்கத்தில் சிறப்பு விற்பனை நடைபெறவுள்ளது. மறைந்த முதல்வர் அண்ணா பிறந்த நாள் மற்றும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, செப்டம்பர் 15 -ஆம் தேதி முதல் வரும் அக்டோபர் 15 -ஆம் தேதி வரையில், சிறப்பு நூல் விற்பனை நடைபெறவுள்ளது. இந்த நூல்கள் 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

SCROLL FOR NEXT