தமிழ்நாடு

நவோதயா பள்ளிகள் தேவையற்றது: கனிமொழி

DIN

தமிழகத்திற்கு நவோதயா பள்ளிகள் தேவையற்றது என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார். 
சென்னையிலிருந்து மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: நவோதயா பள்ளிகளை தமிழகத்திற்கு கொண்டு வரக்கூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ளது. திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலினும் அதை எதிர்த்து அறிக்கை விட்டுள்ளார். நவோதயா பள்ளிகள் தமிழகத்திற்கு தேவையற்றவை. மத்திய அரசு நாம் கேட்கும் திட்டங்களை நிராகரித்துவிட்டு எதிர்க்கும் திட்டங்களை தமிழகத்தில் திணிக்க முயல்கிறது. தமிழகத்தில் நடைபெறும் எந்த போராட்டத்தையும் மாநில அரசு கண்டுகொள்வதில்லை. நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதில் தவறில்லை. மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT