தமிழ்நாடு

சேலத்தில் மலையில் நின்று "செல்பி' எடுத்தவர் தவறி விழுந்து சாவு

தினமணி

சேலம் ஊத்துமலை முருகன் கோயில் மலை மேல் உள்ள பாறையில் நின்று நண்பர்களுடன் "செல்பி' எடுத்த போது தவறி விழுந்ததில், தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆர்.கணேசன் (25), தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை மாலை தனது நண்பர்களான ராஜ்குமார் (21), அபிஷேக் (21), ஜெகன் (21) ஆகியோருடன் சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஊத்துமலை முருகன் கோயிலுக்குச் சென்றார். பின்னர், கோயில் மலை மேல் இருந்தபடி சேலம் மாநகரின் அழகை ரசித்துக் கொண்டு இருந்தாராம். இதைத் தொடர்ந்து, பல்வேறு இடங்களில் அமர்ந்து செல்லிடப்பேசியில் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பின்னர் ஒரு பாறை மேல் நின்று நண்பர்களுடன் கணேசன் "செல்பி' எடுத்த போது, திடீரென கால் வழுக்கி 50 அடி பள்ளத்தில் விழுந்தார். அதில், தலையில் பலத்த காயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த அன்னதானப்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT