முகப்பு
தமிழ்நாடு

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் பணப்பட்டுவாடா: ராஜேஷ் லக்கானி பதில் மனு தாக்கல்

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றது தொடர்பான வழக்கில்  தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:41 PM
பகிர்:

சென்னை: ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றது தொடர்பான வழக்கில்  தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார்.

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா வழங்கப்பட்டது தொடர்பாக புகார் எழுந்ததை அடுத்து, இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பதில் மனுவை தாக்கல்  செய்துள்ளார்.

அந்த மனுவில், பணப்பட்டுவாடா தொடர்பாக மாநில காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்கும் உரிமை காவல்துறைக்கே உள்ளது.

பணப்பட்டுவாடா விவகாரம் தொடர்பாக காவல்துறை எடுக்கும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது என்று தெரிவித்திருந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →