தமிழ்நாடு

மலைப் பகுதியில் பலத்த மழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளம்!

DIN

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வியாழக்கிழமை வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டியது. இதனால், ஐந்தருவியில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.
குற்றாலம் பகுதியில் வியாழக்கிழமை காலை முதல் அவ்வப்போது மிதமான சாரல் பெய்தது. ஆனால், மலைப் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால், ஐந்தருவியில் பிற்பகல் முதல் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கி, வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டியது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸார் தடைவிதித்தனர். குற்றாலம் பேரருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. 
பள்ளிகளுக்கு விடுமுறை என்பதாலும், தொடர்ந்து அரசு விடுமுறை என்பதாலும் வியாழக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT