தமிழ்நாடு

இராமனின் பெயரால் இரத்தத்தை காவு கேட்கிற கூட்டம்: பாஜக மீது நாஞ்சில் சம்பத் கடும் விமர்சனம்! 

DIN

சென்னை: இராமனின் பெயரால் இரத்தத்தை காவு கேட்கிற கூட்டம் என்று கொல்கத்தா ராம நவமிக் கொண்டாட்டங்களினால் உண்டான உயிர்ப்பலிகள் குறித்து பாஜக மீது நாஞ்சில் சம்பத் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

கொல்கத்தாவில் சமீபத்தில் நடந்த ராம நவமிக் கொண்டாட்டங்களில் ஏற்பட்ட கலவரங்களைத் தொடர்ந்து  5 பேர் பலியாகினர். இதுதொடர்பாக நாஞ்சில் சம்பத் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

மகுடத்தை மறுதலித்து 14 ஆண்டுகள் வனவாசம் செய்த இராமனின் பெயரால் இராமநவமிக் கொண்டாடி வங்காளத்தில் 5 பேர் உயிரை பலி வாங்கியிருக்கிறார்கள் . வங்காளத்தில் தடம் பதிக்க அவர்களுக்கு இன்று இராமன் கிடைத்திருக்கிறான் . இதை இராமனே விரும்பமாட்டான்.

இராமநவமியைக் கொண்டாடி வங்காளத்தின் நிம்மதியை கெடுத்தவர்கள் எதிர்காலத்தில் நிம்மதியாக இருக்க முடியாது. ‘ PUBLIC MEMORY IS SHORT‘ என்று நினைக்கிறார்கள் . ஆனால்  ‘PUBLIC MEMORY IS SHARP’ என்று நிரூபிப்பதற்கு மக்கள் சித்தம் கொண்டுவிட்டார்கள். இராமனின் பெயரால் இரத்தத்தை காவு கேட்கிறக் கூட்டம் இதை புரிந்துகொள்வது நல்லது .

இவ்வாறு அவர் மறைமுகமாக பாரதிய ஜனதாவை விமர்சித்திருக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT