தமிழ்நாடு

ஸ்டாலின் தலைமையில் முக்கொம்புவில் இருந்து காவிரி உரிமை மீட்புப் பயணம் தொடங்கியது

மு.க. ஸ்டாலின் தலைமையில் திருச்சி மாவட்டம் முக்கொம்புவில் இருந்து காவிரி உரிமை மீட்புப் பயணம் தொடங்கியது.

DIN


திருச்சி: மு.க. ஸ்டாலின் தலைமையில் திருச்சி மாவட்டம் முக்கொம்புவில் இருந்து காவிரி உரிமை மீட்புப் பயணம் தொடங்கியது.

திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் தொண்டர்கள் ஏராளமானோர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெறும் காவிரி உரிமை மீட்புப் பயணத்தில் பங்கேற்றுள்ளனர்.

முக்கொம்புவில் நடந்த காவிரி உரிமை மீட்புப் பயணத்தின் துவக்க நிகழ்ச்சியில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திராவிடர் கட்சித் தலைவர் கி. வீரமணி ஆகியோர் தொண்டர்கள் மத்தியில் பேசினர். 

காவிரி உரிமை மீட்புப் பயணத்தை வீரமணி தொடங்கி வைத்து, ஸ்டாலினுடன் பயணத்தில் பங்கேற்றுள்ளார். காவிரி உரிமை மீட்புப் பயணத்தை அறிவிக்கும் வகையில் கொடியேற்றிவிட்டு பயணம் தொடங்கப்பட்டது. காவிரி காரையோரமாகவே நடைபெற்று வரும் இந்த பயணத்தில், முன்னாள் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், மற்றும் ஏராளமான தொண்டர்களும் ஸ்டாலினுடன் பங்கேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

பத்மாவதி தாயாா் பவித்ரோற்சவம் நிறைவு

சமூக வலைதளங்களில் அச்சம் தரும் விடியோ: இளைஞா் கைது

தஞ்சாவூா் மாநகரில் நாளை மின் தடை

திருடப்பட்ட நகைகள் 48 மணி நேரத்தில் மீட்பு

SCROLL FOR NEXT