முகப்பு
தமிழ்நாடு

மத்திய அரசு, ஆளுநரை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும்: மு.க.ஸ்டாலின்

மத்திய அரசு, ஆளுநரை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Updated On : 18 ஏப்ரல் 2018, 2:07 pm IST
பகிர்:

மத்திய அரசு, ஆளுநரை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
பேராசிரியை விவகாரத்தில் சிபிஐ அமைந்தால்தான் உண்மை வெளியே வரும். மத்திய அரசு, ஆளுநரை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும்.

நாகரீகமற்ற முறையில் ஆளுநர் நடந்துகொள்வது வேதனை அளிக்கிறது. ஆளுநருக்கு எதிராக திட்டமிட்டு போராட்டம் நடத்த வாய்ப்பில்லை. எந்த நேரமும், எந்த சூழ்நிலையிலும் ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்.

Advertisement

Advertisement

மேலாண்மை வாரியம் போராட்டம் பற்றி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு பின் முடிவு எடுக்கப்படும். ஹெச். ராஜாவின் கீழ்த்தரமான பதிவிற்கு பதில் சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.