தமிழ்நாடு

நிர்மலா தேவி விவகாரம்: புகார் கூறிய 4 மாணவிகளிடம் சந்தானம் குழு விசாரணை

DIN


மதுரை: மாணவிகளுக்கு தவறான வழிகாட்ட முயன்ற கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் புகார் அளித்த 4 மாணவிகளிடமும், அருப்புக்கோட்டை கல்லூரியில் இன்று விசாரணை நடத்தப்படுகிறது.

விசாரணைக் குழுத் தலைவர் சந்தானம் தலைமையில் பேராசிரியர்கள் கமலி, தியாகேஸ்வரி உள்ளிட்டோர் 4 மாணவிகளிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்களுடன், வருவாய்த் துறை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் உடன் உள்ளனர். இந்த விசாரணைக் குழுவினரின் விசாரணை இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. முதலில், கல்லூரியின் தற்போதைய செயலர் ராமசாமியிடம் விசாரணை நடத்தப்பட்டது. பிறகு, 12.10  மணியளவில் மாணவிகளிடம் விசாரணை தொடங்கியது.

பேராசிரியை நிர்மலா தேவி மீது புகார் கூறிய 4 மாணவிகளும் பெற்றோருடன் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். அவர்களது அடையாளங்களை வெளிப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT