முகப்பு
தமிழ்நாடு

ஆன்-லைன் பி.இ. கலந்தாய்வில் பங்கேற்பது எப்படி?: விவரங்கள் நாளை வெளியீடு

ஆன்-லைன் பொறியியல் சேர்க்கைக் கலந்தாய்வில் பங்கேற்பது எப்படி, விண்ணப்பத்தை எப்படிப் பதிவு செய்வது என்பன உள்ளிட்ட விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் புதன்கிழமை (மே 2) வெளியிட உள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

ஆன்-லைன் பொறியியல் சேர்க்கைக் கலந்தாய்வில் பங்கேற்பது எப்படி, விண்ணப்பத்தை எப்படிப் பதிவு செய்வது என்பன உள்ளிட்ட விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் புதன்கிழமை (மே 2) வெளியிட உள்ளது.
அரசு பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இந்தச் சேர்க்கை முதன் முறையாக, இந்த ஆண்டு முழுவதும் ஆன்-லைனில் நடத்தப்பட உள்ளது.
இதன் மூலம், மாணவர்கள் சென்னைக்கு வராமல், வீட்டில் இருந்தபடியே கலந்தாய்வில் பங்கேற்க முடியும். மேலும், மாணவர்களின் உதவிக்காகவும், அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்காகவும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் கட்டணம் ஏதுமின்றி மாணவர்கள் சேவையைப் பெற முடியும்.
விண்ணப்பப் பதிவு வியாழக்கிழமை (மே 3) காலை 9 மணிக்குத் தொடங்கப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூரவ அறிவிப்பு ஏப்ரல் 29-ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், மாணவர்களின் வசதிக்காக ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்பது எப்படி, விண்ணப்பத்தை எப்படி பூர்த்தி செய்வது என்பன குறித்த விவரங்கள் செவ்வாய்க்கிழமை அல்லது புதன்கிழமை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும் என தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →