முகப்பு
தமிழ்நாடு

முதல்வர் நாளை தில்லி பயணம்

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஒரு நாள் பயணமாக புதன்கிழமை (மே 2) காலை தில்லி செல்கிறார். மத்திய அரசின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு

தமிழ்நாடு

முதல்வர் நாளை தில்லி பயணம்

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஒரு நாள் பயணமாக புதன்கிழமை (மே 2) காலை தில்லி செல்கிறார். மத்திய அரசின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஒரு நாள் பயணமாக புதன்கிழமை (மே 2) காலை தில்லி செல்கிறார். மத்திய அரசின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, வியாழக்கிழமை (மே 3) காலை தில்லியில் இருந்து சென்னை திரும்புகிறார்.
மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாள் நூற்றாண்டு விழா தொடர்பான நிகழ்ச்சி தில்லியில் புதன்கிழமை (மே 2) மாலை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை காலை சென்னையில் இருந்து தில்லி செல்கிறார். தில்லி செல்லும் அவர் அங்கு மத்திய அரசின் நிகழ்ச்சிகள் பங்கேற்கிறார்.
அமைச்சர்களுடன் சந்திப்பு: தில்லி பயணத்தின் போது, மத்திய அமைச்சர்களை முதல்வர் பழனிசாமி சந்தித்துப் பேச உள்ளதாகத் தெரிகிறது. பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. பிரதமர் நேரம் தரும் நிலையில் அவரை, முதல்வர் பழனிசாமி சந்திப்பார் எனவும், பிரதமரைச் சந்திக்க முடியாவிட்டால் மத்திய அமைச்சர்களை அவர் சந்திக்கவுள்ளதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
குறிப்பாக, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின்கட்கரி உள்ளிட்ட மூத்த அமைச்சர்களை சந்தித்துப் பேசவுள்ளார் என தமிழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →