முகப்பு
தமிழ்நாடு

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை 

சென்னையில் செவ்வாய் மாலையிலிருந்து தாம்பரம், அண்ணா நகர் மற்றும் மைலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. 

Updated On : 14 ஆகஸ்ட், 2018 at 7:03 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:00 PM

சென்னை: சென்னையில் செவ்வாய் மாலையிலிருந்து தாம்பரம், அண்ணா நகர் மற்றும் மைலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. 

சென்னையில் செவ்வாய் மாலையிலிருந்து தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மீனம்பாக்கம், பெருங்களத்தூர், வண்டலூர் மற்றும் குன்றத்தூர் ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

அதேபோல ஆவடி, பெரம்பூர் மற்றும் அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

Advertisement

கிண்டிக்கு அருகில் உள்ள ஈக்காட்டுத்தாங்கல், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சாலிகிராமம், வடபழனி, தேனாம்பேட்டை, மைலாப்பூர் மற்றும் சவுகார்பேட்டை ஆகிய இடங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

அதேசமயம் சிறுசேரி மற்றும் பெருங்குடி உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.