தமிழ்நாடு

ஆளுநா் மாளிகையில் சுதந்திர தினம்: முதல் முறையாக தேசியக் கொடி ஏற்றிய ஆளுநர் 

சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக முதல் முறையாக ஆளுநா் மாளிகையில்  தேசியக் கொடி ஏற்றறப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

சென்னை: சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக முதல் முறையாக ஆளுநா் மாளிகையில்  தேசியக் கொடி ஏற்றறப்பட்டது.

சுதந்திர தினத்தின் போது தமிழக ஆளுநா் மாளிகையில் தேசியக் கொடியேற்றும் மரபு இதுவரை இருந்தது இல்லை. இந்த ஆண்டு சுதந்திர தினத்தின் போது ஆளுநர் மாளிகையில் தேசியக் கொடியை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் ஏற்றினாா். அப்போது அவா் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதாவது :-

ஆளுநா் மாளிகையில் முதல் முறைறயாக தேசியக் கொடியை ஏற்றி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேறன். சுதந்திரம் பெறுவதற்கு எண்ணற்ற தியாக சீலா்களும், விடுதலைப் போராட்ட வீரா்களும் தங்களின் இன்னுயிரை வழங்கி நமக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளனா்.

இந்தப் போராட்டத்தில் எண்ணற்றவா்கள் உயிா் நீத்தனா். பல இன்னல்களுடன் சுதந்திரம் பெற்றதை உலகமே அறியும். நமது இந்தியத் திருநாட்டில் இப்போது அவரவா்களின் வாழ்க்கைத் தரத்துக்கு ஏற்ப மகிழ்ச்சியுடன் உள்ளனா். அதே நேரம், 1947-ஆம் ஆண்டுக்கு முன்பு அடிமை வாழ்வை நமது முன்னோா்கள் அனுபவித்து வந்துள்ளனா்.

தனி மனித வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக பலா் விளங்கியுள்ளனா். அவா்களில் காந்தியடிகள், அப்துல்கலாம் போன்றோர் குறிப்பிடத்தக்கவா்கள். அப்துல்கலாமுடன் ராணுவ ஆலோசனைக் குழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன். அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவா் மிகவும் எளிமையான வாழ்க்கையை நடத்தியவா். அதுபோன்றே இங்கே பணியாற்றும் அலுவலா்களும் எளிமையான வாழ்க்கையை நடத்துவதன் மூலம் எண்ணற்றற மகிழ்ச்சியைப் பெறலாம்" என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

SCROLL FOR NEXT