தமிழ்நாடு

கருணாநிதியும் வாஜ்பாயியும்

தினமணி

பாஜக மூத்த தலைவரும் முன்னாள் பாரதப் பிரதமருமான மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாய்க்கும், திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான காலம் சென்ற கருணாநிதிக்கும் பல ஒற்றுமைகள் இயற்கையாகவே காணப்படுகின்றன. 
இருவருமே 1924-ஆம் ஆண்டு பிறந்தவர்கள். கருணாநிதி ஜூன் 3-ஆம் தேதி பிறந்தார் என்றால், வாஜ்பாய் டிசம்பர் 25-ஆம் தேதி பிறந்தவர். இருவருமே 2018-ஆம் ஆண்டில் ஒரே மாதத்தில் இயற்கை எய்தி இருக்கிறார்கள்.
வாஜ்பாய், கருணாநிதி இருவருமே தங்களது பேச்சாற்றலால் மக்களைக் கவர்ந்தவர்கள். இருவரும் எந்தக் கேள்விக்கும் சாதுர்யமாக பதிலளிப்பதில் வல்லவர்கள். இருவருமே 1957-இல் தான் முதன்முதலில் தேர்தல் களம் கண்டவர்கள். வாஜ்பாய் தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் என்றால், கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராக பொன்விழா கண்டவர். இருவருக்குமே இலக்கிய ஆர்வம் உண்டு என்பது மட்டுமல்ல, கவிஞர்களும்கூட. தேசிய அளவில்  வாஜ்பாய் எப்படி அனைத்துக் கட்சியினருடனும் நட்புறவு கொண்டிருந்தாரோ அதேபோல கருணாநிதியும் மாநில அளவில் மாற்றுக் கட்சியினருடன் நட்புறவு பாராட்டியவர். 
இருவருமே தங்களது இறுதிக் காலத்தில் வயோதிகம் காரணமாக நடமாட முடியாமலும் பேச முடியாமலும் நோய்வாய்ப்பட்டிருந்தனர். இரண்டு பேருக்கும் இடையில் முக்கியமான வித்தியாசம், வாஜ்பாய் திருமணமாகாதவர். கருணாநிதி சம்சாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT