தமிழ்நாடு

10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக +2 தேர்வை தனித்தேர்வராக எழுத முடியாது 

DIN

சென்னை: 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக +2 தேர்வை தனித்தேர்வராக எழுத முடியாது என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக +2 எனப்படும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வை, தனித்தேர்வராக எழுதலாம் என்று விதிமுறை இருந்தது.

இந்நிலையில் 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக +2 தேர்வை தனித்தேர்வராக எழுத முடியாது என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு:

தமிழகத்தில் இதுவரை பள்ளி இறுதி பொதுத்தேர்வை எழுதித் தேர்ச்சிபெற்றவர்கள் நேரடியாக +2 எனப்படும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வை, தனித்தேர்வராக எழுத இயலும் என்ற விதிமுறை இருந்தது.

ஆனால் தற்பொழுது + 1 எனப்படும் மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வும் அரசு பொதுத் தேர்வாக மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக +2 தேர்வை தனித்தேர்வராக எழுத முடியாது. அவர்கள் +1 வகுப்பு பொதுத் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்ற பின்னால்தான், +2 தேர்வினை எழுத முடியும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ராகுலை விமர்சித்து விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

SCROLL FOR NEXT