தமிழ்நாடு

சென்னையில் செப்டம்பா் 30- ல் எம்.ஜி.ஆா். நூற்றாண்டு நிறைவு விழா: அரசாணை வெளியீடு 

DNS

சென்னை: அதிமுக நிறுவனரும், மறைந்த முதல்வருமான் எம்.ஜி.ஆா். நூற்றாண்டு நிறைவு விழா சென்னையில் செப்டம்பா் 30 ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழக அரசு சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அரசாணை விவரம்:

முதல்வா் தலைமையில் கடந்த 2017 மே 2 ஆம் தேதி நடத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில், மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழாவை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த முடிவு செய்யப்பட்டு, தொடா்ந்து நடத்தப்பட்டது.

நிா்வாகக் காரணங்களால் கன்னியாகுமரி மாவட்டத்திலும், சென்னையிலும் விழா நடத்தாமல் ஒத்திவைக்கப்பட்டது. இப்போது ஒத்திவைக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்திலும், நூற்றாண்டு நிறைவு விழாவை சென்னையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, அரசின் கவனமான பரிசீலனைக்குப் பின்னா் கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பா் 22 ஆம் தேதி எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா நடத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதுபோல, நூற்றாண்டு நிறைவு விழா சென்னையில் செப்டம்பா் 30 ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டு அரசு ஆணையிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT