தமிழ்நாடு

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாகப் பெய்த மழை 

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் திங்கள் மாலை பரவலாக மழை பெய்தது.

DIN

சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் திங்கள் மாலை பரவலாக மழை பெய்தது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுநிலையின் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மிதமான மழை பெய்யும்.  ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உண்டு. எனவே செவ்வாயன்று மீனவர்கள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் திங்கள் மாலை பரவலாக மழை பெய்தது. 

சென்னையில் நுங்கம்பாக்கம், வடபழனி, கே.கே.நகர், சேப்பாக்கம், விருகம்பாக்கம், பெரம்பூர், கொடுங்கையூர், வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தரமணி, போரூர், வேளச்சேரி, திருவல்லிக்கேணி, ஆதம்பாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. 

அதுபோல பெருங்குடி, கிண்டி, பரங்கிமலை, மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சற்று கனமழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாதது வருத்தமளிக்கிறது! - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

முதல் டெஸ்ட்: மூவர் சதம் விளாசல்; இந்தியா 286 ரன்கள் முன்னிலை!

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு

ரிஷ்ய சிருங்கர் வழிபட்ட ரிஷப வாகனன்!

கடன் தொல்லை போக்கும் நரசிம்மர்!

SCROLL FOR NEXT