தமிழ்நாடு

பேருந்து நிலையங்கள், கல்வி நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு செய்யப்பட்ட ஏற்பாடுகள் என்ன?

பேருந்து நிலையங்கள், கல்வி நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு செய்யப்பட்ட ஏற்பாடுகள் என்ன? என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

DIN

சென்னை: பேருந்து நிலையங்கள், கல்வி நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு செய்யப்பட்ட ஏற்பாடுகள் என்ன? என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

பேருந்து நிலையங்கள், கல்வி நிலையங்கள் போன்ற பொது இடங்களில் பிறரைப் போலவே மாற்றுத் திறனாளிகளும் சரிசமமாக பயன்படுத்த வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். அவர்களுக்கான இயங்கு தளமானது உறுதி செய்யப்பட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. 

இந்த மனுவானது புதனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேருந்து நிலையங்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு செய்யப்பட்ட ஏற்பாடுகள் என்ன? என்பது குறித்து தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

அத்துடன் இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

SCROLL FOR NEXT