தமிழ்நாடு

உயர்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் இன்று மூடல்

தினமணி

சென்னை உயர் நீதிமன்றத்தின் ஏழு வாயில்களும் சனிக்கிழமை இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (டிச. 9) இரவு 8 மணி வரை மூடப்பட்டு இருக்கும்.
 150 ஆண்டுகள் பழைமையும், பெருமையும் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தை அனைவரும் பயன்படுத்தினாலும், யாரும் உரிமை கொண்டாட முடியாது. உயர்நீதிமன்றத்தின் ஏழு வாயில்களும் டிசம்பர் 8-ஆம் தேதியான சனிக்கிழமை இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி வரை மூடப்படும் என்று உயர் நீதிமன்ற நிர்வாகப் பதிவாளர் தேவநாதன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
 அதன் நகல் அனைத்து வாயில்களிலும் ஒட்டப்பட்டுள்ளது. இந்த 24 மணி நேரத்தில் நீதிமன்ற வளாகத்துக்குள் அரசு துறையினர், வழக்குரைஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் என யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கன்னிகாபரமேஸ்வரி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உயர்நீதிமன்றம் கட்டப்பட்டதால் ஆண்டில் ஒரு நாள் உயர்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டு, சாவி கோயிலில் வைக்கப்படும் பாரம்பரிய நடைமுறை இன்றளவும் தொடர்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2: 116 சிறைக் கைதிகள் தோ்ச்சி

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

SCROLL FOR NEXT