தமிழ்நாடு

மேக்கப் மேன் முத்தப்பா உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி

DIN

பழம்பெரும் மேக்கப் மேன் முத்தப்பா உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று இன்று அஞ்சலி செலுத்தினார்.

பழம்பெரும் மேக்கப்பேன் முத்தப்பா இன்று காலமானார். அவருக்கு வயது 89. உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள விஜயா முருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. அவரது மனைவி பெயர் சேதுலட்சுமி(78). இவருக்கு ஒன்பது மகன்கள். 

முத்தப்பா சினிமா உலகில் நுழைந்து 60 வருடம் பணியாற்றி அனுப்வம் கொண்டவர். எம்ஜிஆர், சிவாஜி, கன்னடம் ராஜ்குமார், ரஜினி, கமல்ஹாசன் உட்பட பல முன்னணி நகர்களுக்கு மேக்கப் மேனாக பணியாற்றிவர். சிவாஜி குடும்பத்துடன், ரஜினி குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புகொண்டவர். ஏவிஎம் நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றிவர். ஏவிஎம்மின் அத்தனை படங்களுக்கும் பணியாற்றியவர். 

இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் யூனிட்டில் முக்கியமானவராக விளங்கியவர். அவரது இயக்கத்தில் வெளிவந்த படங்களில் எல்லாம் பணியாற்றியவர். மறைந்த முத்தப்பா ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியும் கூட. இவரது இறுதிச்சடங்கு நாளை சென்னையில் நடைபெறுகிறது. அவரது உடலுக்கு திரையுலைகைச் சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் முத்தப்பா உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT