தமிழ்நாடு

பூம்புகார் கடற்கரையில் கடலில் மூழ்கி கல்லூரி மாணவிகள் மூவர் பலி 

DIN

சீர்காழி: பூம்புகார் கடற்கரைக்கு சுற்றுலா வந்த வந்த கல்லூரி மாணவிகள் மூவர் கடலில் மூழ்கி பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.   

மயிலாடுதுறையில் உள்ள தர்மபுரம் ஆதீனம் மகளிர் கல்லூரியில் பயின்று வந்தவர்கள் மஞ்சு, விவேகா மற்றும் சிவப்பிரியா. இவர்கள் 3 பேரும் தங்களது தோழிகள் நால்வருடன் புதன் காலை பூம்புகார் கடற்கரைக்கு சுற்றுலா சென்றனர்.

அங்கு காவிரி கடலோடு சங்கமிக்கும் இடத்தில் இறங்கி குளிப்பது என்று முடிவு செய்தனர். அதன்படி குளிக்கும் போது சிவபிரியா, மஞ்சு, விவேகா ஆகிய 3 பேர் மட்டும் சேற்றில் சிக்கிக் கொண்டனர். இதைக் கண்ட மற்ற மாணவிகள் செய்வதறியாமல் அச்சத்தில் அலறினர்.

இதை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து உதவுவதற்குள் 3 மாணவிகளும் சேற்றில் சிக்கி மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.பின்னர் அவர்கள் மூவரது உடல்களும் மீட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டது. 

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பூம்புகார் போலீசார் 3 மாணவிகள் உடலையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

காவிரி ஆறானது கடலுடன் கலக்கும் இடத்தில் சேறுடன் கூடிய புதைமணல் அதிகம் இருப்பது குறித்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தும்,மாணவிகள் அதனைக் கவனிக்காமல் கடலில் இறங்கி பலியான சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ சாரதா மடத்தின் தலைவா் ப்ரவ்ராஜிகா ஆனந்தபிராணா மாதாஜி மறைவு

ரூ.2 லட்சம் சவுக்கு மரங்கள் தீயில் சேதம்: இருவா் மீது வழக்கு

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: டிஎஸ்பி சாட்சியம்

சிதம்பரத்தில் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT