முகப்பு
தமிழ்நாடு

சட்டப் பேரவையை முற்றுகையிட முயன்ற மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது

பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தி சட்டப் பேரவையை முற்றுகையிட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சியினரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:14 PM
பகிர்:

பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தி சட்டப் பேரவையை முற்றுகையிட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சியினரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
பேருந்துக் கட்டணத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெலினிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் திங்கள்கிழமை கோட்டையை நோக்கி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் நூற்றுக்கணக்கானோர், சட்டப் பேரவையை நோக்கி பேரணியாகப் புறப்பட்டனர். அவர்களை பாரிமுனையில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். 
உடனே, அனைவரும் சாலையில் அமர்ந்து 
மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்
காரணமாக அப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஜி.ராம
கிருஷ்ணன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.