முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் இனி பட்டையைக் கிளப்பப் போகுது வெயில்: வானிலை மையம் சொல்வது என்ன?

தமிழகம் மற்றும் புதுவையில் இனிவரும் நாட்களில் வெப்பநிலை படிப்படியாக உயரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 12 பிப்ரவரி, 2018 at 9:43 PM
பகிர்:

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் இனிவரும் நாட்களில் வெப்பநிலை படிப்படியாக உயரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:

சென்னையில் தற்போது மேகக்கூட்டங்கள் நிலவுவதன் காரணமாக குறைந்தபட்ச வெப்பநிலையின் அளவு உயர்ந்துள்ளது. காலநிலையானது குளிர் காலத்திலிருந்து கோடை காலத்தை நோக்கி மாறத் துவங்கியுள்ளதால் ,  சூரியன் விரைவாகவே உதித்து வருகிறது.

Advertisement

இதன் விளைவாக தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இனிவரும் நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலை படிப்படியாக உயரும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.