தமிழ்நாடு

வேறு யாராவது இருந்திருந்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள்: அதிர வைத்த ஓபிஎஸ்! 

சசிகலா குடுமபத்தினர் கொடுத்த அழுத்தத்திற்கு என்னைத் தவிர வேறு யாராவது இருந்திருந்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள் என்று அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.. 

DIN

தேனி: சசிகலா குடுமபத்தினர் கொடுத்த அழுத்தத்திற்கு என்னைத் தவிர வேறு யாராவது இருந்திருந்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள் என்று அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.

அதிமுக செயல்வீரர்கள் கூட்டமானது தேனியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. அதில் கலந்து தலைமை ஏற்று  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

சசிகலா குடும்பத்தினர் தொடர்ந்து கொடுத்து வந்த அழுத்தங்களை நான் தாங்கிக் கொண்டேன். எனது இடத்தில வேறு யாரவது இருந்திருந்தால் தற்கொலைதான் செய்து கொண்டிருப்பார்கள்.

சசிகலா குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளாக கட்சியில் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு விசுவாசமாக இருந்ததால், சசிகலா குடும்பத்தினரால் நான் துரோகி என முத்திரை குத்தப்பட்டேன். 

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பொழுது, அவரை அமெரிக்காவுக்குக் கொண்டு சென்று சிகிச்சைஅளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன் 

ஜெயலலிதா மரணம் குறித்து ஆணைய விசாரணை நடைபெற்று வருவதால் வேறு எதுவும் இப்பொழுது கூற இயலாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT