தமிழ்நாடு

தூத்துக்குடி வஉசி துறைமுகம் நிலக்கரி இறக்குமதியில் புதிய சாதனை

DIN

நிலக்கரி இறக்குமதி செய்வதில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் திங்கள்கிழமை புதிய சாதனை படைத்தது.
இத்துறைமுகத்தின் 9ஆவது சரக்குத் தளத்தில் எம்.வி. ஸீ கோப் என்ற கப்பலிலிருந்து திங்கள்கிழமை 24 மணி நேரத்துக்குள் 45,396 மெட்ரிக் டன் நிலக்கரியைக் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு, 2014 ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி 41,376 மெட்ரிக் டன் நிலக்கரி கையாண்டதே சாதனையாக இருந்தது.
இந்நிலையில், இப்புதிய சாதனை படைக்க உதவியாக இருந்த அனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவிப்பதுடன், வருங்காலங்களில் பல சாதனைகளைப் தொடர்ந்து புரிய ஒத்துழைக்க வேண்டும் என, துறைமுகப் பொறுப்புக் கழக தலைவர் ஐ. ஜெயக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 9-இல் சங்கர மடத்தில் ஷியாமா சாஸ்திரிகள் ஜெயந்தி: 350 இசைக் கலைஞா்கள் பங்கேற்பு

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

SCROLL FOR NEXT