தமிழ்நாடு

திமுக, அதிமுக-வை தூக்கி எறிய மக்கள் தயாராகிவிட்டனர்: அரவிந்த் கேஜரிவால்

Raghavendran

நடிகர் கமல்ஹாசன் புதிய அரசியல் கட்சியை புதன்கிழமை தொடங்கினார். மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் தனது அரசியல் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து 'மக்கள் நீதி மய்யம்' என்று கட்சிப் பெயரை அறிவித்தார். இந்த விழாவில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கலந்துகொண்டார்.

இவ்விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், இனி நமக்கு நிறைய கடமை இருக்கிறது தமிழகம் எங்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போல் பல கூட்டங்கள் நடைபெறும். இது ஒருநாள் கொண்டாட்டம் அல்ல. இந்த சோற்றுப் பருக்கையை தொட்டுப்பார்க்க நினைப்பவர்கள் தொட்டுப் பாருங்கள். ஊழலில் தோய்ந்த கைகள் சுடும் என்று கூறினார்.

பின்னர் பேசிய தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்,

கமல்ஹாசன் நேர்மையானவர் மட்டும் அல்ல, துணிச்சலானவரும் ஆவார். கடந்த சில மாதங்களாக கமல்ஹாசன் காட்டிய துணிச்சலை பார்த்து வியந்தேன். சிறந்த நடிகரான கமல் உண்மையான ஹீரோவாக உள்ளார்.

தில்லியில் நேர்மையான ஆட்சி நடைபெற்று வருகிறது. தில்லி மக்களைப்போல தமிழக மக்களும் வரலாற்றை மாற்றி அமைப்பார்கள். இந்த சாதனையை தமிழகத்தில் கமல் செய்து முடிப்பார்.

தமிழக மக்கள் திமுக, ஆதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கு இடையே சிக்கி கிடந்தனர். தமிழகத்தில் தற்போது நேர்மையான அரசியல் கட்சி உருவாகி உள்ளது.

ஊழலை ஆதரிப்பவர்கள் திராவிட கட்சிகளை ஆதரியுங்கள், கல்வி நிலையம் வேண்டும் என்பவர்கள் கமலை ஆதரியுங்கள். தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை தூக்கி எறிய மக்கள் தயாராகிவிட்டனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 வாக்கு எண்ணிக்கை!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

காஜாமலை பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT