முகப்பு
தமிழ்நாடு

கமலின் அரசியல் பிரவேசம்: பிரேமலதா வரவேற்பு

நடிகர் கமலின் அரசியல் பிரவேசத்தை வரவேற்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கூறினார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

நடிகர் கமலின் அரசியல் பிரவேசத்தை வரவேற்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கூறினார்.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கு புதன்கிழமை மாலை தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா வந்தார். கோயிலில் உள்ள ஸ்ரீசம்பந்த விநாயகர், ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சன்னதிகளில் அவர் சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர், கோயில் நவக்கிரக சன்னதியில் அவர் நெய் தீபம் ஏற்றி வழிபட்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு பிரேமலதா அளித்த பேட்டி:
நடிகர் கமலின் அரசியல் பிரவேசத்தை வரவேற்கிறோம். தேர்தலில் அவர் வெற்றி பெறுவாரா என்பதை காலம்தான் முடிவு செய்யும். தமிழக சட்டப் பேரவையில் ஜெயலலிதாவின் முழு உருவப்படம் வைக்கப்பட்டதற்கு தேமுதிக தான் முதலில் எதிர்ப்புத் தெரிவித்தது.

வரும் தேர்தல்களில் தேமுதிகவின் அரசியல் கூட்டணி குறித்து விஜயகாந்த் முடிவு செய்வார் என்றார். பின்னர், இரவு 8 மணிக்கு திருவண்ணாமலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள பிரேமலதா புறப்பட்டுச் சென்றார்.
 
 
 

முழு கட்டுரையைப் படிக்க →