முகப்பு
தமிழ்நாடு

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் சபாநாயகர் தனபால் சந்திப்பு! 

எதிர் வரும் திங்களன்று துவங்க உள்ள தமிழக சட்டப்பேரவையின் கூட்டத் தொடரை முன்னிட்டு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சபாநாயகர் தனபால் சந்தித்துள்ளார்.   

Updated On : 30 ஜனவரி, 2024 at 11:54 AM
பகிர்:

சென்னை: எதிர் வரும் திங்களன்று துவங்க உள்ள தமிழக சட்டப்பேரவையின் கூட்டத் தொடரை முன்னிட்டு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சபாநாயகர் தனபால் சந்தித்துள்ளார்.   

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் எதிர் வரும் திங்களன்று துவங்க உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் துவங்குவது என்பது மரபு.

எனவே ஆளுநர் உரையில் இடம்பெற உள்ள அம்சங்கள் மற்றும் இதர விஷயங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சபாநாயகர் தனபால் கிண்டி ஆளுநர் மாளிகையில் சந்தித்துள்ளார்.

இது வழக்கமான மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.    

முழு கட்டுரையைப் படிக்க →