தமிழ்நாடு

ஊழல் கண்காணிப்பு ஆணையர் மாற்றத்தினை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு! 

DIN

சென்னை: தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணைய தலைவராக இருந்த ஜெயக்கொடி அப்பதவியிலிருந்து மாற்றப்பட்டதினை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவராக இருந்த ஜெயக்கொடி என்பவர் அந்த பதவியியிருந்து மாற்றம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக மோகன் பியார்  என்பவர் அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.  

இது தொடர்பான அறிவிப்பு புதன்கிழமையன்று வெளியானதும் தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரும், திமுக செயல்தலைவருமான ஸ்டாலின் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். தமிழகத்தை பரபரப்புக்கு உள்ளாக்கிய குட்கா ஊழல் வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக டிஜிபி ராமானுஜம் ஆகியோர் மீதான வழக்கு விசாரணையை திசை திருப்பும் முயற்சி இது என்று அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஜெயக்கொடி அப்பதவியிலிருந்து மாற்றப்பட்டதினை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. திமுக சட்டப்பிரிவு செயலாளரான ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.      

தனது மனுவில் ஜெயக்கொடி அப்பதவியிலிருந்து மாற்றபட்டதில் உள்நோக்கம் இருப்பதாக தெரிவித்துள்ள பாரதி, புதிய ஆணையரான மோகன் பியாரின் நியமனத்தினை ரத்து செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT