தமிழ்நாடு

லஞ்ச வசூலில் ஈடுபட்ட டாஸ்மாக் மேலாளர் உள்பட 3 பேர் கைது

DIN

புதுக்கோட்டையில் மதுபானக்கூடங்களில் ரூ.8,36,500 வசூல் செய்த டாஸ்மாக் மேலாளர் உள்பட 3 பேரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.
புதுக்கோட்டையில் ஏலம் விடப்படாமல் இயங்கிவரும் மதுபானக்கூடங்களில் டாஸ்மாக் அதிகாரிகள் லஞ்ச வசூலில் ஈடுபடுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் அருகே சென்றுகொண்டிருந்த டாஸ்மாக் மேலாளரின் காரை திடீரென வழிமறித்து சோதனையிட்டனர். அப்போது அந்த காரில், ரூ.8,36,500 ரொக்கம் இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, டாஸ்மாக் மேலாளர் மதிசெல்வம், மேற்பார்வையாளர்களான மணிவண்ணன், முருகசேன் ஆகிய 3 பேரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT