தமிழ்நாடு

பா.வளர்மதிக்கு பெரியார் விருதா?: தொல்.திருமாவளவன் வேதனை

DIN

முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு பெரியார் விருது அளித்தது வேதனை அளிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

2017-18-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. அதில் 2017-அண்ணா விருது- சுப்பிரமணியன், பெரியார் விருது- வளர்மதி, அம்பேத்கர் விருது -டாக்டர் கே.ஜே.ஜார்ஜ், 2018- திருவள்ளூவர் விருது- பெரியண்ணன், பெரியார் விருது- தா.ரா.காமராஜர், திரு.வி.க. விருது எழுத்தாளர் பாலகுமாரன், பாரதியார் விருது- சு.பாலசுப்பிரமணியன் என்ற பாரதிபாலன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

தந்தை பெரியார் விருது பெற்ற பா.வளர்மதிக்கு ரூ. 1 லட்ச ரூபாய்க்கான காசோலையையும், தங்கப்பதக்கமும் பெற்றுக்கொண்டார். இதுகுறித்து தொல்.திருமாவளவன் கூறியதாவது,
முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு பெரியார் விருது அளித்தது வேதனை அளிக்கிறது. பெரியார் விருது வழங்க அரசு என்ன வரையறை வைத்துள்ளது என்பதை முதல்வர் விளக்க வேண்டும்.

கட்சித் தொடங்குவதற்கு முன்பே நடிகர்களுக்குள் போட்டி ஏற்பட்டுள்ளது. ரஜினியின் அரசியல் எப்படி இருக்கப் போகிறது என்பதற்கு குருமூர்த்தியின் பேச்சே சான்று. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT