தமிழ்நாடு

யானைகள் முகாமுக்கு வருகை தந்த ரஷிய நடனக் கலைஞர்கள்

DIN

மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் நடைபெற்று வரும் யானைகள் நலவாழ்வு முகாமுக்கு ரஷிய நாட்டின் நடனக் கலைஞர்கள் வியாழக்கிழமை வருகை தந்தனர்.
மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுகையில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில் 48 நாள்கள் நடைபெறும் இப்புத்துணர்வு முகாமில் தமிழகத்திலிருந்து 31 யானைகளும் புதுவையிலிருந்து 2 யானைகளும் பங்கேற்று உள்ளன. இந்த முகாமைப் பார்வையிட தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதனால் இப்பகுதி சுற்றுலா மையம்போல் ஆகியுள்ளது. 
இந்நிலையில் யானைகள் நலவாழ்வு முகாமை பார்வையிட ரஷிய நாட்டைச் சேர்ந்த கலாசார நடனக் கலைஞர்கள் 13 பேரைக் கொண்ட குழு வியாழக்கிழமை வருகை தந்தது. 
இந்திய-ரஷிய கலாசார பரிவர்த்தனையின்கீழ் ரஷிய நாட்டைச் சேர்ந்த டைமண்ட் நடனக் குழுவின் தலைவர் மரியா தேப்ரோவா தலைமையில் வந்த குழுவினரை முகாம் ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி வெங்கட், முகாம் பொறுப்பாளர் வெற்றிச்செல்வன், வனபத்ரகாளியம்மன் கோயில் உதவி ஆணையர் ராமு, ஈரோடு மாவட்ட உதவி ஆணையர் முருகையா உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் ரஷிய நடனக்குழுவினர், யானைகள் நடைப்பயிற்சி செல்வதையும், குளிப்பதையும், உணவு உண்பதையும் கண்டு ரசித்தனர். பின்னர் யானைகளுடன் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். 
முகாம் குறித்து ரஷிய கலைக் குழுவினர் கூறியதாவது : 
எங்கள் நாட்டில் யானைகள் இல்லை. யானைகளை சினிமா, தொலைக்காட்சிகளில்தான் பார்த்துள்ளோம். இப்போதுதான் நேரில் வெகு அருகில் காண்கிறோம். இத்தனை யானைகளை ஒரே இடத்தில் பார்ப்பது, பரவசமூட்டும் அனுபவமாக உள்ளது. முகாமை நடத்தி வரும் தமிழக அரசுக்கு எங்கள் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து கொள்கிறோம் என்றனர். 
முகாமுக்கு வந்த ரஷிய குழுவினருடன் பாகன்கள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT