தமிழ்நாடு

கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெற்றுத் தர மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்: பி.ஆர். பாண்டியன்

DIN

கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெற்றுத் தர மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறினார்.
இதுகுறித்து திருத்துறைப்பூண்டியில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
காவிரி டெல்டா மாவட்டங்கள் தொடர்ந்து 5 ஆண்டுகளாக வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. 
கர்நாடகத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்துக்கு தண்ணீர் பெற்றுத் தர மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் பயிர்கள் தண்ணீரின்றி கருகும் அபாயத்தில் உள்ளன.
தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெற்றுத் தர மத்திய அரசை வலியுறுத்துங்கள் எனத் தெரிவித்தால், கடிதம் எழுதி உள்ளதாக தட்டிக் கழிக்கின்றனர்.
கருகும் பயிரைக் காப்பாற்ற தமிழக முதல்வர் விரைந்து அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி மத்திய அரசிடம் வலியுறுத்தி, கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெற்றுத் தர வேண்டும்.
ஓ.என்.ஜி.சி. நிறுவனம் காவிரி டெல்டா மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்துகின்ற திட்டங்களைக் கொண்டு வர உள்ளது.
'ஓ.என்.ஜி.சி.யே வெளியேறு' என்ற கோரிக்கையை முன்னிறுத்தி நன்னிலத்தில் ஜன. 29 -ஆம் தேதி உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ. நெடுமாறன், லாப்டி இயக்க தலைவர் பத்மஸ்ரீ கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகளை ஒன்று திரட்டி அமைக்கப்பட இருக்கும் 30 எண்ணெய்க் கிணறு திட்டத்துக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

தில்லி பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் பிரமுகா்கள்!

தில்லியில் 2,800 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மொத்தம் 1.52 கோடி வாக்காளா்கள்

அச்சிடுவோரின் முகவரி இல்லாத அரசியல் விளம்பர பலகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

SCROLL FOR NEXT