முகப்பு
தமிழ்நாடு

சென்னை அண்ணா சாலையில் ஏற்பட்ட 'திடீர்' பள்ளம் சரிசெய்யப்பட்டது

சென்னையின் பிரதான அண்ணா சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட திடீர் பள்ளம் சரிசெய்யப்பட்டது.

Updated On : 26 ஜனவரி, 2018 at 7:17 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:35 PM

சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடக்கும் இடத்தில் 40 அடி நீளத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் மாற்றுப் பாதைக்கு திருப்பிவிடப்பட்டன.

நந்தனத்தில் இருந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள் விஜயராகவா சாலை, வடக்கு போக்கு, ஜிஎன் சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. அண்ணாசாலையில் இருந்து நந்தனம் நோக்கி எந்த தடையும் இல்லாமல் வாகனங்கள் சென்றன. 

இதையடுத்து சென்னை ஆட்சியர் அன்புசெல்வன், மயிலாப்பூர் வட்டாட்சியர் ஆனந்த மகாராஜன் நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர், பள்ளம் ஏற்பட்ட இடத்தில் ஆய்வுமேற்கொள்ள மயிலாப்பூர் வட்டாட்சியருக்கு சென்னை ஆட்சியர் உத்தரவிட்டார்.

Advertisement

பின்னர், மெட்ரோ ரயில் பணிகள் நடக்கும் சென்னை அண்ணா சாலையில் ஏற்பட்ட பள்ளம் முழுவதுமாக சரிசெய்யப்பட்டது. இதையடுத்து வழக்கம்போல் அப்பகுதியில் போக்குவரத்து இயங்கத்தொடங்கியது.

இதற்கிடையில் நேரு பூங்கா முதல் சென்னை சென்ட்ரல் இடையேயான 2.5 கிலோ மீட்டர் சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இந்நிலையில், அண்ணா சாலையில் பள்ளம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஆய்வுக்கு பிறகே தெரியவரும், அந்த பகுதியில் ஏற்கனவே மெட்ரோ ரயிலுக்கான சுரங்க பாதைகள் அமைக்கும் பணி முடிவடைந்துவிட்டது.  ஆய்வுக்கு பிறகே பள்ளம் ஏற்பட்டது குறித்த காரணம் தெரியவரும் என்று மெட்ரோ ரயில் பொதுமேலாளர் அரவிந்த் ராய் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.